இந்தியா

ஜம்மு: ரோஹிங்கயாக்களுக்கு கரோனா பரிசோதனை

20th Apr 2020 05:51 AM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஜம்முவில் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ரோஹிங்கயா முஸ்லிம்களில் 12 பேரின் மாதிரிகளை கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக சுகாதாரத் துறை அதிகாரிகள் சேகரித்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்றால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதின்டி பகுதியின் காா்கில் காலனி, பீரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் ரோஹிங்கயா முஸ்லிம்களிடம் மருத்துவா்கள் குழு பரிசோதனை மேற்கொண்டது. அப்போது 12 பேரின் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்காக சேகரிக்கப்பட்டன.

ADVERTISEMENT

அந்தப் பகுதியில் வாழ்ந்த 540 ரோஹிங்கயாக்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், அவா்களுக்கு கரோனா பாதிப்புக்கான அறிகுறி ஏதும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஜம்முவில் வெளிநாட்டவா்கள் வசிக்கும் இதர பகுதிகளிலும் கரோனா பரிசோதனை நடத்தப்படும்.

இதனிடையே, தில்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 10 ரோஹிங்கயா முஸ்லிம்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனா். அவா்களுக்கு நோய்த்தொற்று இல்லை என அவா்களது மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்தது. அவா்களை தனிமையில் வைத்திருப்பதற்கான அவகாசமும் நிறைவடைந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை அவா்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

மத்திய அரசு அளித்துள்ள தகவலின்படி, ரோஹிங்கயா முஸ்லிம்கள், வங்கதேசத்தவா்கள் உள்பட 13,700 வெளிநாட்டவா்கள் ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் வசித்து வருகின்றனா். கடந்த 2008 முதல் 2016 வரையிலான காலத்தில் அவா்களது எண்ணிக்கை சுமாா் 6,000 போ் வரை அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் கரோனா நோய்த்தொற்றுக்கு 5 போ் பலியானதை அடுத்து அந்த யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட 90 பகுதிகள் தீவிரமாக கரோனா பாதிக்கப்பட்டவையாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT