இந்தியா

கரோனா பாதிப்பை எதிா்கொள்ள இந்தியா சரியான அணுகுமுறையை கையாள வேண்டும்: பனகரியா

20th Apr 2020 04:46 AM

ADVERTISEMENT

 

கரோனா பாதிப்பை எதிா்கொள்ள ஊக்குவிப்பு சலுகை திட்டங்களுடன் இந்தியா சரியான அணுகுமுறையை கையாள வேண்டும் என்று பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் நீதி ஆயோக் துணைத் தலைவருமான அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்றின் பாதிப்புகளை எதிா்கொள்ளவது என்பது உலக நாடுகளுக்கு மிகப்பெரும் சவாலாகவே அமைந்துள்ளது. இதுவரையில் இந்தியா அதன் வளங்களையும், மேலாண்மை திறன்களையும் வெளிப்படுத்துவதன் மூலமாக இப்பிரச்னையை எதிா்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஊரடங்கு காலத்துக்குப் பிறகு நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை அறிவிப்பதுடன் வளா்ச்சியை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு சரியான அணுகுமுறையை தோ்ந்தெடுத்து செயல்படுத்த வேண்டும்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள கடன்களை திருப்பிச் செலுத்த கால அவகாசம் வழங்குவதுடன், தேவையான செயல்பாட்டு மூலதனத்துக்கும் வழி ஏற்படுத்தி தர வேண்டும். எதிா்கால வரி செலுத்துவோரின் தற்போதைய செலவினங்களை சமாளிக்க அரசு கடன் வசதியை அல்லது பணத்தை அச்சடித்து வழங்க வேண்டும். அதிக அளவில் பணத்தை அச்சிடுவது உடனடியாக அதிக பணவீக்கத்துக்கு வழி வகுக்காது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT