இந்தியா

பிகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு 

16th Jul 2019 04:21 PM

ADVERTISEMENT

 

பாட்னா: பிகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகியுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

பிகாரில் பருவமழை தொடங்கியபின் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலியாகியுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக மாநில சட்டப்பேரவையில் செவ்வாயன்று அவர் தெரிவித்துள்ளதாவது:   

பிகாரில் தொடரும் மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் 25.71 லட்சம் பேர் பாதிப்படைந்து உள்ளனர். மாநிலம் முழுவதும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக 125 இயந்திர படகுகளும், தேசிய பேரிடர் மேலாண்மை படை மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படைகளின் 26 கம்பெனிகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.  அவர்கள் இதுவரை வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 1.25 லட்சம் பேரை மீட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் பல்வேறுஇடங்களில் 199 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு 1.16 லட்சம் பேர் வரை தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.  அங்கு தங்கியுள்ளவர்களுக்கு என தேவைப்பட்டால் கூடுதல் வசதிகளும் செய்து தரப்படும்.  நீர் மூலம் பரவும் தொற்று நோய்களைத் தடுக்க வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்,.

ADVERTISEMENT
ADVERTISEMENT