இந்தியா

ரயில்வே துறையில் ஊழல் அதிகாரிகளின் பட்டியல் தயார் ஆகிறது: பியூஷ் கோயல் 

15th Jul 2019 09:20 PM

ADVERTISEMENT

 

லண்டன்: ரயில்வே துறையில் ஊழல் அதிகாரிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், பின்னர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது

இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் இந்த அரசானது ஊழலை முற்றிலுமாக ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. இதற்கு ஓர் உதாரணமாக மத்திய நிதி மற்றும் வரித்துறையில் ஆணையர் பொறுப்பில் உள்ள 15 க்கும் மேற்பட்டவர்கள் கட்டாய ஓய்வில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதேபோல் ரயில்வே துறையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அதேபோல  ஊழல் புரியும் அதிகாரிகள் யார் எனவும்கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அது நிறைவு பெறும்போது அவர்களுக்கு பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்படும். தவறு செய்ய நினைக்கும் மற்றவர்களுக்கும் அது ஒரு பாடமாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT