இந்தியா

உத்தரப்பிரதேச பள்ளியில் தலித் மாணவர்களுக்குத் தனி வரிசையில் உணவு: மாயவாதி கடும் கண்டனம் 

DIN

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில பள்ளி ஒன்றில் தலித் மாணவர்களுக்கு மட்டும் தனி வரிசையில் உணவு பரிமாறப்பட்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் ராம்பூர் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தொடக்கப் பள்ளியில்தான் மாணவர்கள் சாதிப் பிரிவினைக்கு ஆளாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இங்கு மதிய உணவின்போது தலித் மாணவர்கள் மட்டும் தனியாக அமர  வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.]

அத்துடன் பள்ளியில் தலித் மாணவர்கள் உணவு உண்பதற்காக தங்களது தட்டுகளை வீட்டிலிருந்து கொண்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், பின்னர் தனியாக அமர வைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டுள்ளது.  இதனை  அதிகாரிகளும் கல்வித்துறை ஒப்புக்கொண்டுள்ளனர். 

குறிப்பிட்ட தொடக்கப் பள்ளி முதல்வர் பி. குப்தா பேசுகையில், உயரதிகாரிகள் ஆய்வுக்கு வந்திருந்தபோது சாதி அடிப்படையில் வேறுபாடு காட்ட வேண்டாம் என்று மாணவர்களிடம் கேட்டுக்கொண்டனர். ஆனால் அதன்பிறகும் இங்கு இந்த நடைமுறை தொடர்கிறது" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் தலித் மாணவர்களுக்கு மட்டும் தனி வரிசையில் உணவு பரிமாறப்பட்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயவாதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பல்லியாவில் அரசுப் பள்ளியில் தலித் மாணவர்கள் தனித்தனியாக அமர்ந்து உணவு உண்ணும் செய்தி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய இழிவான இனவெறி பாகுபாடு காட்டுபவர்கள் மீது அரசு உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாகுபாடு காட்டும் பள்ளி அதிகாரிகள் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கை, மற்றவர்கள் பாடம் கற்கும் விதமாக அமைய வேண்டும். இனி இதுபோன்ற தவறை யாரும் செய்யக்கூடாது. 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT