விஐபி ஹெல்த்

ஃபிட்டாக இருக்க உலக அழகி மனுஷி பின்பற்றும் உணவு பழக்கம் இதுதான்!

22nd Nov 2017 03:10 PM

ADVERTISEMENT

 

உலக அழகி 2017-ஆக பட்டம் வென்றிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த  மனுஷி சில்லாரின் உடல் அமைப்பு நம்மில் பலரை வியப்பும் அதே சமயம் பொறாமையும் அடைய செய்திருக்கும். இவர்களைப் போன்ற அழகான மற்றும் ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற என்ன செய்வது? நம்முடைய உடல் எடையை எப்படிக் குறைப்பது? அப்படி என்னதான் இவங்களாம் சாப்பிடுவார்கள்? என்று யோசித்ததுண்டா. இதோ அவருடைய ஃபிட்னஸ் ரகசியத்தை அவரே கூறியிருக்கிறார்.

1. காலை உணவைத் தவிர்க்க கூடாது: காலை உணவைத் தட்டிக்கழிப்பது உடல் அமைப்பிற்கு மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆபத்தானது. அது நாளின் முடிவில் பசி வேதனையை அதிகரித்து நம்மை அதிகம் சாப்பிட தூண்டும்.


2. சிறிய தட்டை உபயோகியுங்கள்: சிறிய தட்டை உபயோகிப்பது இயற்கையாகவே நம்மைக் குறைவாக சாப்பிடத் தூண்டும். இதனால் அளவுக்கு அதிகமாகச சாப்பிட்டுவிட்டு பின்னர் உடல் எடை அதிகரித்துவிட்டதே எனக் கவலை படுவதில் பயனில்லை.

ADVERTISEMENT

3. சர்க்கரையைத் தவிருங்கள்: பழங்களை ஜூஸாக்கி குடிக்கும் போதும் அதில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. அதிலும் முக்கியமாகச் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை முற்றிலும் தவிர்க்கவும்.

உணவு அட்டவணை:

  • அதிகாலை: தூங்கி எழுந்தவுடன் இரண்டு அல்லது மூன்று கிளாஸ் தண்ணீர் (சில சமயம் எலுமிச்சை சாறு சிறிது பிழிந்து)
  • காலை உணவு: புளிப்பேறாத தயிருடன் ஓட்ஸ் அல்லது கோதுமை ஃப்லேக்ஸ் மற்றும் பழங்கள்; இரண்டு அல்லது மூன்று முட்டை வெள்ளை மட்டும் கரு இல்லாமல் மற்றும் அவகேடோ, காரேட் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு.
  • பிரன்ச்: இளநீர் மற்றும் பழங்கள்.
  • மதிய உணவு: அரிசி, சப்பாத்தி, காய்கறி அல்லது கோழிக் கறி மற்றும் பருப்பு.
  • மாலை: வாழைப்பழம் அல்லது அத்தி பழத்தை கொட்டையுடன் அரைத்து ஸ்மூத்தி (பழச்சாறு). உப்பு சேர்க்காத கொட்டைகள் (முந்திரி, பிஸ்தா, பாதாம், வால்நட்)
  • இரவு உணவு: வேக வைத்த காய்கறிகள் (ப்ரோக்கோலி, கேரட், பீன்ஸ், காளான்) மீன் அல்லது கோழிக் கறி.

இவற்றை எல்லாம் சாப்பிடும் போது அதிக கொழுப்பு சத்து நிறைந்த எந்த ஒரு விஷயத்தையும் ருசிக்காகவும் சேர்க்கக் கூடாது. இதை அப்படியே இல்லாவிட்டாலும் ஓரளவிற்குப் பின்பற்றினாலும் உலக அழகியின் உடல் அளவான 34-26-34 அளவைப் பெற்றுவிடலாம். வாழ்த்துக்கள்!

Tags : food fitness
ADVERTISEMENT
ADVERTISEMENT