உணவே மருந்து

ரத்த உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் அற்புத கீரை

தினமணி

தேவையான பொருட்கள்

பாலக் கீரை   -   ஒரு கட்டு

மிளகு        -  தேவையான அளவு

பூண்டு        -   15  பல்

மஞ்சள் தூள்   -  சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான அளவு பாலக் கீரையை எடுத்து சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பூண்டை ஒன்றிரண்டாக சிதைத்துக் கொள்ளவும். ஒரு இட்லி பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பாலக் கீரை, மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் பூண்டுப் பல் சேர்த்து நீராவியில் வேக வைக்கவும்.

ஒரு வாணலியில் நீராவியில் வேகவைத்த பாலக் கீரையைப் போட்டு நன்கு கலக்கி  ஒரு வேளை உணவாக சாப்பிடவும்.
 
தீரும் குறைபாடுகள்

ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவக் கூடியது.

சாப்பிடும் முறை

ரத்த உற்பத்தி குறைவாக உள்ளவர்கள் மேற்கூறிய முறையில்  பாலக் கீரையை வேகவைத்து ஒருவேளை உணவாக உட்கொண்டு வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT