செய்திகள்

அதிகப்படியான கொழுப்பு கரையவும், நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் நீங்கவும் சிறந்த வழி!

2nd Mar 2019 10:57 AM | கோவை பாலா

ADVERTISEMENT


 
அன்னாசிப் பூ ரசம்

தேவையான பொருட்கள்

அன்னாசிப் பூ  - 50 கிராம்
பூண்டு - 10 கிராம்
இஞ்சி - 10 கிராம்
கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி
மிளகு - 10 கிராம்
சீரகம் - 10 கிராம்
பெருங்காயம் - ஒரு துண்டு (2 கிராம்)
மஞ்சள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தக்காளி  - 7

செய்முறை : முதலில் தக்காளியை சின்னதாக அரிந்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கரைசலாக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அன்னாசிப் பூ, பூண்டு, இஞ்சி, கொத்தமல்லித் தழை, மிளகு, சீரகம், பெருங்காயம் ஆகியவற்றை நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி விழுதாக அரைத்துக் கொள்ளவும். தக்காளி கரைசலை அடுப்பிலேற்றி அதில் மஞ்சள் மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்க்கவும்.நன்கு சூடானதும் கொதிப்பதற்கு முன்பாகவே இறக்கி விடவும்.

ADVERTISEMENT

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT