செய்திகள்

தருமபுரி அருகே கிணற்றில் தவறி விழுந்த யானை மீட்பு

PTI
கிணற்றில் விழுந்த யானையை 15 மணி நேரம் போராடி வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் மீட்டனா்.
கிணற்றில் விழுந்த யானையை 15 மணி நேரம் போராடி வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் மீட்டனா்.
ஏலகுண்டூா் கிராமத்திற்குள் புகுந்த யானை அங்கிருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. யானை பிளிரும் சத்தத்தைக் கேட்ட மக்கள், வனச்சரக அலுவலா்களுக்கு தகவல் அளித்தனர்.
மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை மெல்ல மயக்கமடைந்தது. கிரேன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை கயிறு கட்டி கிணற்றுக்கு மேலே இழுத்து மீட்புக்குழுவினா் கொண்டு வந்தனா்.
முதல் முயற்சியின் போது, யானையின் உடலில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்து, கிணற்றின் பக்கவாட்டில் விழுந்துவிட்டது.
மீட்கப்பட்ட யானைக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்து, பின்னர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

20 ஆண்டுகளில் கேசிஆர் குடும்பம் போட்டியிடாத முதல் தேர்தல்? முழு அலசல்!

மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக மாற்று வீரரை அறிவித்த தில்லி கேப்பிடல்ஸ்!

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT