அரசுத் தேர்வுகள்

தினமும் ரூ.821 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!

தினமணி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகம், குரோம்பேட்டையில் தற்காலிக அடிப்படையில் கணினி தொழில்நுட்பத் துறையில் ஆசிரியரல்லாத பணியான தொழில்முறை உதவியாளர்-I (கணினி தொழில்நுட்பம்) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு  நாள் ஒன்றுக்கு ரூ.821 சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.022-2022/MIT/Non-Teaching. தேதி: 29.12.2022

பணி மற்றும் இதர விவரங்கள்:  நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்


பணி:
Professional Assistant-I(Computer Technology)

காலியிடங்கள்: 6

தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல் அல்லது தகவல் தொழில்நுட்பம் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். 

சம்பளம்: நாள் சம்பளம் அடிப்படையில், நாள் ஒன்றுக்கு ரூ.821 வழங்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பங்கள் அதிகயளவில் வரப்பெற்றால் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Dean, Madras Institute of Technology Campus, Anna University, Chromepet, Chennai 600044

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 18.1.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT