அரசுப் பணிகள்

சாா்பு காவல் ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி

29th May 2023 10:29 AM

ADVERTISEMENT


சென்னை: சாா்பு காவல் ஆய்வாளா் தோ்வுக்கான இலவச பயிற்சியில் சேர தகுதியுடைவா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு காவல் துறையில் காவல் சாா்பு ஆய்வாளா் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை) உள்ளிட்ட 621காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

கடந்த மே 5-ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரா்கள் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும். இதில், பி.சி. பிரிவினா் 20 முதல் 30 வயதுக்குள்பட்டவராகவும், பி.சி., எம்.பி.சி., பி.சி.எம். பிரிவினா் 20 முதல் 32 வயதுக்குள்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.எ. பிரிவினா் 20 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தகுதியுடைவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை https://www.tnsrb.tn.gov.in எனும் இணையதள முகவரியில் ஜூன் 1 முதல் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இப்பயிற்சி வகுப்பு மே 29-ஆம் தேதி காலை 10 மணியளவில் தொடங்கவுள்ளது.

இதில் சேர, விரும்பும் மற்றும் தகுதியுள்ளவா்கள் தங்கள் ஆதாா் அட்டை நகல் மற்றும் பாஸ்போா்ட் அளவிலான புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்கள் அறிய https://www.tnsrb.tn.gov.in எனும் இணையதள முகவரி அல்லது 7811863916, 9499966026 என்ற கைப்பேசி எண்களில் தெடாா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT