அரசுப் பணிகள்

விரைவில் உதவி சுற்றுலா அலுவலர் பணி தேர்வுகான அறிவிப்பு வெளியாகும்!

தினமணி


சென்னை: உதவி சுற்றுலா அலுவலர் பணிக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். 

உதவி சுற்றுலா அலுவலர்(கிரேடு 2) பணியில் 23 காலியிடங்கள் நிரப்பப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கண்ட பணியிடங்களுக்கு சுற்றுலா தொடர்பான பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சுற்றுலா மேலாண்மையில் பட்டயப் படிப்பும் அதோடு அரசு கணினி சான்றிதழ் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சியும் அடிப்படை தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கணினி அறிவியல் பட்டதாரிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு ஜூலை மாதம் போட்டித் தேர்வு நடத்தப்படும், தேர்வு முடிவுகள் செப்டம்பரில் வெளியிடப்பட்டு அக்டோபரில் கலந்தாய்வு நடைபெறும் என்று அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணியாளர் தேர்வாணையத்தின் திருத்தப்பட்ட ஆண்டு தேர்வு கால அட்டவலணையின்படி, சுற்றுலா அலுவலர் பதவிக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் மே மாதம் ஆகியும் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை. 

இதுகுறித்து தேர்வாணைய செயலாளர் பி. உமா மகேஸ்வரி கூறுகையில்,  உதவி சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான கல்வித் தகுதியில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதுதொடர்பாக சுற்றுலாத் துறை ஒப்புதல் அளித்ததும் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT