அரசுப் பணிகள்

விண்ணப்பிக்கலாம் வாங்க... தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி!

2nd Dec 2022 02:05 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின்கீழ் செயல்படும் கும்பகோணம், விழுப்புரம், சேலம், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர், சென்னை மாவட்ட பணிமனைகளில் பொறியியல் துறையில் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: பட்டதாரிகளுக்கான தொழில்பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 169 

உதவித்தொகை: மாதம் ரூ.9,000

ADVERTISEMENT

பணி: டிப்ளமோ முடித்தவர்களுக்கான தொழில்பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 177

உதவித்தொகை: மாதம் ரூ.7,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 2020, 2021, 2022 ஆம் கல்வியாண்டுகளில் முடித்தவர்களாக இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத்தேர்வு 2013 ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும். நேர்முகத்தேர்வுக்கு வரும்போது தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் தங்களது தகுதி மற்றும் இதர விவரங்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேற்கண்ட இணையதளத்தில் வழங்கப்படும்  Unique Enrolment Number பயன்படுத்தி அதே இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

முன்பதிவு செய்யவதற்கான கடைசி நாள்: 5.12.2022

தொழில்பழகுநர் பயிற்சிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.12.2022

மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT