வேலைவாய்ப்பு

பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: விவரங்கள் இதோ!

24th Sep 2022 01:44 PM

ADVERTISEMENT


சென்னை தரமணியில் உள்ள CSIR Research Institute இல் காலியாக உள்ள திட்ட அசோசியேட் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.EE/06/2022

பணி: Project Associate-I
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.31,00 +எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் போன்ற பாடத்தில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். சிஎஸ்ஐஆர் நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மற்றஉம் எச்ஆர்ஏ வழங்கப்படும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வங்கியில் வேலை வேண்டுமா..? எஸ்பிஐ வங்கியில் 1,673 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணங்கள் வரவேற்பு!

ADVERTISEMENT

பணி: Project-II
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரு.35,000 + எச்ஆர்ஏ
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் இன்ஜினியரிங் போன்ற பாடத்தில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். சிஎஸ்ஐஆர் நெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள், பணி அனுபவம் மற்றும் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | மிஸ் பண்ணிடாதீங்க... பட்டதாரிகளுக்கு ஆர்பிஐ-இல் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: CSIR Madras Complex, Taramani, Chennai

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 28.9.2022

விண்ணப்பம்: www.csircmc.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிகளுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.  

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT