வேலைவாய்ப்பு

தமிழக அரசில் ரூ.1,34,200 சம்பளத்தில் வேலை வேண்டுமா? அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

19th Sep 2022 03:11 PM

ADVERTISEMENT

 

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 161 குரூப் 5ஏ பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு பட்டதாரிகளிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்:  161 

நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Section Officer in Secretariat  – 74 
பணி: Assistant Section Officer in Secretariat (Finance Department) - 29 
சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,34,200

ADVERTISEMENT

பணி: Assistant in Secretariat (Other than Law and Finance Department) - 49 
பணி: Assistant in Secretariat (Finance Department) - 09
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 73,700 

தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசு பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் வணிகவியல், பொருளாதாரம், புள்ளியியல் போன்ற பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி அனுபவம்: அரசு அலுவலகங்களில் பணி சார்ந்த துறைகளில் உதவியாளர் அல்லது இளநிலை உதவியாளர் பணிகளில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் தகுதியாக எடுத்துக்கொள்ளப்படும். 

வயது வரம்பு: 1.7.2022 தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது  35 மற்றும் 30 என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுவரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
 
தேர்வு செய்யப்படும் முறை: அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவுக் கட்டணமாக ரூ.100-ம், தேர்வு கட்டணமாக ரூ.150-ம் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிரந்த பதிவு செய்திருப்பவர்கள் தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:  இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் 21.09.2022க்குள் விரைந்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தில் ஏதேனும் மாற்றம் அல்லது திருத்தம் செய்யப்பட வேண்டியிருந்தால் 26 முதல் 28 ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/21_2022_Group_V_A_Notfn_Eng.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT