வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிடாதீங்க... பட்டதாரிகளுக்கு ஆர்பிஐ-இல் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

19th Sep 2022 04:48 PM

ADVERTISEMENT

 

வங்கி வேலைக்காக தயாராகி வரும் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் உதவி மேலாளர் மற்றும் துணை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் உடனடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளம்பர எண்.2/2022

நிறுவனம்: நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (பார்பானம்ப்ல்/கம்பெனி)

ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy Manager - Environmental Engineering background  - 01
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.69,700
வயதுவரம்பு: 37க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Manager – Environmental Engineering background - 01
வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.56,100
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

பணி: Assistant Manager - Civil Engineering Background  - 05
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
பணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager - Finance & Accounts Background - 06
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 31க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிஏ முடித்து சம்மந்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Manager (Security) - 04
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 45 - 52க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: இந்திய விமானப்படை, இந்திய கடற்படை தொழில்நுட்ப அலுவலகங்களில் குறைந்தபட்சம் ஜேசிஓ -ஆக பணியாற்றிருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவில் டெக்னிக்கல் டிப்ளமோ முடித்தவராகவும் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், பணியாளர்கள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.brbnmpl.co.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The CFO cum CS, Bharatiya Reserve Bank Note Mudran Private Limited
No.3 & 4, I Stage, I Phase, B.T.M. Layout, Bannerghatta Road
Post Box No. 2924, D.R. College P.O., Bengaluru - 560 029. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள்: 8.10.222

மேலும் விவரங்கள் அறிய https://www.brbnmpl.co.in/careers/ அல்லது 
https://www.brbnmpl.co.in/wp-content/uploads/2022/09/1_Detailed-Advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT