அரசுப் பணிகள்

இந்திய ரயில்வேயில் 3,115 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

3rd Oct 2022 01:36 PM

ADVERTISEMENT


இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3,115 தொழில் பழகுநர் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எந்த மாநிலத்தை சேர்ந்த இந்திய இளைஞர்களும் விண்ணப்பிக்கலாம். 

அறிவிப்பு எண். RRC-ER/ActApprentices/2022-23

பணி: தொழில் பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 3115

ADVERTISEMENT

தகுதி: பத்தாம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் தொழில்பயிற்சிக்கான என்சிவிடி, எஸ்சிடிவி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர்(வாயு மற்றும் எலக்ட்ரிக்), ஷீட்மெட்டல் ஒர்க்கர், லயன்மேன், வயர்மேன், பெயிண்டர் தொடர்புடைய பிரிவுகளில் சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை:  www.rrcer.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.100

உதவித்தொகை: பயிற்சியின்போது தொழில் பழகுநர் சட்டத்தின் படி மாதம் மாதம் உதவித்தொகை வழங்கப்படும். 

மேலும் விவரங்கள் அறிய  www.rrcer.com என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT