வேலைவாய்ப்பு

தமிழக அரசில் அலுவலக உதவியாளர் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

25th May 2022 02:27 PM

ADVERTISEMENT


சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்: 27

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 

ADVERTISEMENT

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி பொதுப்பிரிவினர் 18 முதல் 32க்குள்ளும், பிசி, எம்பிசி பிரிவினர் 34க்குள்ளும் மற்ற பிரிவினர் 37க்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளாவறு விண்ணப்பத்தை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ரூ.50 அஞ்சல் தலையுடன் கூடிய சுயமுகவரியிட்ட உறையுடன் "அரசு தலைமை வழக்குரைஞர், உயர்நீதிமன்றம், சென்னை-600 104" என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.06.20222

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT