வேலைவாய்ப்பு

தமிழ்நாடு காவல்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு... ஆகஸ்ட் 15க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு

1st Jul 2022 02:26 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர், தீயணைப்பாளர் போன்ற 2,890 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 3,552 

நிறுவனம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 2022

ADVERTISEMENT

பணி: இரண்டாம் நிலை காவலர்(மாவட்ட, மாநகர, ஆய்தப்படை) 
காலியிடங்கள்: 2,180

பணி: இரண்டாம் நிலை காவலர்(தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 
காலியிடங்கள்: 1091

பணி: இரண்டாம் நிலை சிறை காவலர்
காலியிடங்கள்: 161

பணி: தீயணைப்பாளர்
காலியிடங்கள்: 120

சம்பளம்: மாதம் ரூ.18,200 - 67,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 15.08.2022

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT