வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சாரத் துறையில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்! 

25th Sep 2021 03:03 PM

ADVERTISEMENT

 


தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாக உள்ள தனிப்பட்ட உதவியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 03

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

ADVERTISEMENT

நிர்வாகம்: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

பணி: Personal Assistant to Director - 01 
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் முதுநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.45,000 

பணி: Assistant (Legal) - 01 
தகுதி: சட்டத்துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் ஆங்கில தட்டச்சில் முதுநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.26,000

பணி: Assistant - 01 
தகுதி: வணிகவியல் பிரிவில் முதுகலை பட்டம், ஐசிடபுள்யுஏ, சிஏ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் ஜிஎஸ்டி படிப்புகளில் சான்றிதழ் மற்றும் ஆங்கில தட்டச்சு முதுநிலை பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.26,000

இதையும் படிக்க | ரூ. 37,700 சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சியின் புதிய வேலைவாய்ப்பு என்ன தெரியுமா..?

வயது வரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோரும் பிரிவினருக்கு அரசு விதிமுறையின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 4 ஆவது தளம், சிட்கோ கார்ப்பரேட் அலுவலக கட்டடம், திரு.வி.கா தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை 600 032 

தேர்வு செய்யப்படும் முறை :  நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி : 30.09.2021 

மேலும் விபரங்களை அறிய www.tnerc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-070920211807Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

Tags : job news in tamil தமிழ்நாடு அரசு வேலை TNERC Recruitment 2021
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT