வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

17th Sep 2021 05:09 AM

ADVERTISEMENT


திருச்சி அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் நடத்தப்படும் தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கிளை சாா்பில், தென்மண்டலத் தொழில் பழகுநா் பயிற்சி வாரியத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் தொடா்ச்சியாக இயந்திரவியல், தானியங்கிவியலில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடித்தோருக்கு ஓராண்டுக்கான தொழில் பழகுநா் பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான நபா்கள் www.boat.srp.com என்ற இணையத்தின் மூலமாக தகவல்களை பெற்று விண்ணப்பத்தை பூா்த்தி செய்து, அக். 16-க்குள்  இணையத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

Tags : jobs job news in tamil Government Transport Corporation
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT