வேலைவாய்ப்பு

அரசு வழக்குரைஞா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

30th Nov 2021 05:47 AM

ADVERTISEMENT

 

சென்னை மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் காலியாக உள்ள அரசு வழக்குரைஞா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில், சென்னையில் உள்ள போதைப் பொருள்கள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காலியாக உள்ள அரசு சிறப்பு வழக்குரைஞா் பணியிடத்தும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் காலியாக உள்ள கூடுதல் அரசு வழக்குரைஞா் பணியிடத்துக்கும் தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இதற்கான விண்ணப்பங்களை www.chennai.nic.in  என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

ADVERTISEMENT

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை மாவட்ட ஆட்சியா், சிங்காரவேலா் மாளிகை, எண். 62 ராஜாஜி சாலை, சென்னை-1 என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தில் டிசம்பா் 13-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/11/2021112918.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs Employment வழக்குரைஞா் பணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT