வேலைவாய்ப்பு

தமிழக அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.. சென்னை அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலை!

30th Jul 2021 03:14 PM

ADVERTISEMENT


 
சென்னை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட 165 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. 

நிறுவனம்: சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை 

மொத்த காலியிடங்கள்:  165

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

ADVERTISEMENT

பணி: Nurse - 60
சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: Pharmacist - 10
சம்பளம்: மாதம் ரூ.14,000

பணி: Lab Technician - 05
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: Anaesthesia Technician - 10
சம்பளம்: மாதம் ரூ.12,000

பணி: ECG Technician - 10
சம்பளம்: மாதம் ரூ.12,000

பணி: Multi Purpose Hospital Worker - 70
சம்பளம்: மாதம் ரூ.12,000

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... நபார்டு வங்கியில் வேலை

தகுதிகள்:  டிப்ளமோ அல்லது பி.எஸ்சி(நர்சிங்) முடித்தவர்கள், டிபார்ம், டிஎம்எல்டி, இசிஜி டெக்னீசியன் தேர்ச்சி பெற்றவர்கள், 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியுள்ளவர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாக கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர் மற்றும் பேராசிரியர், மகப்பேறு மகளிர் நோயியல் நிலையம் மற்றும் அரசு தாய் சேய் நல மருத்துவமனை, எழும்பூர், சென்னை-08


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
03.08.2021

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2021/07/2021072474.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.  

Tags : jobs Recruitment 2021 தமிழக அரசு வேலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT