வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை

21st Jan 2021 11:52 AM

ADVERTISEMENT


கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நிறுவனம்: கடலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் லிமிடெட்

மொத்த காலியிடங்கள்: 14

பணியிடம்: கடலூர் 

ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Vet) - 01
சம்பளம்: மாதம் ரூ.55,500 - 1,75,700

பணி:  Deputy Manager (QC)/(DC) - 01
சம்பளம்: மாதம் ரூ.35,600 - 1,12,800

பணி: Executive (Office) - 02
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

பணி: Executive (Lab) -  01
சம்பளம்: மாதம் ரூ.20,000 - 63,600

பணி: Junior Executive (Office)/(Purchase) - 03
பணி: Private Secretary (Grade-III) - 01
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு OC பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கும் அதிகபட்ச வயதுவரம்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.  

பணி: Light Vehicle Driver - 02
பணி: Technician (Electrical) - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி:  Senior Factory Assistant - 02
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

வயதுவரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு எஸ்சி, எஸ்டி பிரிவினர் 35க்குள்ளும், எம்பிசி, டிஎன்சி, பிசி பிரிவினர் 32க்குள்ளும், மற்ற பிரிவினர் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்:  எஸ்சி, எஸ்டி பிரிவினர் விண்ணப்பக்கட்டணாக ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை சேத்தியாத்தேப்பில் மாற்றத்தக்க வகையில் The General Manager, Cuddalore DCMPU Ltd என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அல்லது விரைவு அஞ்சலில் மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Ltd., Sethiathope” 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.02.2021

மேலும் விவரங்கள் அறிய https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/Application%20forms%20with%20instructions.pdf/dc57a544-627e-b09b-943d-0027564c6ba5 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Tags : jobs Aavin Cuddalore Recruitment 2021 Aavin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT