வேலைவாய்ப்பு

வங்கியில் வேலை வேண்டுமா இந்தியன் வங்கியில் வேலை

தினமணி


இந்தியன் வங்கியில் நிரப்பப்பட உள்ள் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Indbank Merchant Banking Services Limited

மொத்த காலியிடங்கள்: 19

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Merchant Banker - 02
பணி: Research Analysts - 02
பணி: System Officer - 01
பணி: SO - Dealer (Stock Broking) - 08
பணி: SO - Trainee (Back Office Staff) - 06

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு துறையில் முதுநிலை பட்டம் அல்லது நிதித்துறையில் எம்பிஏ, ஒரு இளநிலை பட்டத்துடன் Merchant Banking -இல் 5 ஆண்டு பணி அனுபவம்,  NISM - Research Analyst சான்றிதழுடன் ஒரு முதுநிலை பட்டம் பொறியியல் துறையில் இளநிலை பட்டம், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல், டெலி கம்யூனிகேசன் பிரிவில் முதுநிலை பட்டம், NISM / NCFM/ NISW NCFM முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ஒவ்வொரு பணிக்கும் மாறுபடும். SO - Trainee பணிக்கு மாதம் ரூ.9,000 - 15,000 வரையும் மற்ற பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் முதல் 6 லட்சம் வரை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.indbankonline.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து பதிவுத் அஞ்சல், கூரியர் மூலம் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Head Administration, Indbank Merchant Banking Services Ltd. I Floor, Khiviraj Complex I, No.480, Anna Salai, Nandanam, Chennai 600035 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.02.2021

மேலும் விவரங்கள் அறிய https://corporate.indbankonline.com என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

மழலையா் பட்டமளிப்பு விழா

ரயில் நிலையம் முன் கோயிலை மறைத்து நுழைவு வாயில்: பாஜக எதிா்ப்பு

கலால் ஊழலில் உருவான குற்றத்தின் வருவாயின் பெரும் பயனாளி ஆத் ஆத்மி கட்சிதான் -அமலாக்கத் துறை பதில்

ஏப். 28, 29 ஆம் தேதிகளில் கா்நாடகத்தில் பிரதமா் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT