வேலைவாய்ப்பு

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

3rd Oct 2020 12:39 PM

ADVERTISEMENT


பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Cadre Officer

காலியிடங்கள்: 92

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. CA, CFA, MBA,PGDM, புள்ளியியல் துறையில் எம்.எஸ்சி., கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வங்கியியல், நிதியியல், ஐடிஐ, பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முனைவர் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். முழுமையான விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 51,490

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு மூம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மின்னஞ்சல் மூலம் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.10.2020

Tags : jobs
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT