வேலைவாய்ப்பு

IBPS Jobs 2019: ரூ.9.36 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா..? 

20th Oct 2019 07:39 PM | ஆர்.வெங்கடேசன்

ADVERTISEMENT

 

நாடு முழுவதும் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஆந்திர பிரகாதி கிராமிய வங்கி, தமிழ்நாடு கிராமிய வங்கி, கர்நாடக கிராமிய வங்கி, மணிப்பூர் ஊரக வங்கி, பஞ்சாப் கிராமி வங்கி என ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்‌ஷன் (ஐ.பீ.பி.எஸ்)’ நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.  முதலில் முதல்நிலை, முதன்மை எழுத்துத் தேர்வும் அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடத்தப்படும். இவற்றில் விண்ணப்பதாரர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் தகுதிச் சான்று வழங்கப்படும். 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது. இது தவிர மற்ற பொதுத்துறை மற்றும் கிராம வங்கிகளில் பணிபுரிய விரும்பும் இந்திய குடிமக்கள் அனைவரும் IBPS நடத்தும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி, தற்போது பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள துணை மேலாளர் மற்றும் இணை ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஐ.பீ.பி.எஸ் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள்: 

பணி: Research Associate –Technical -  01

பணி: Deputy Manager (Accounts) - 01

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகாம், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் எம்.இ அல்லது எம்.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியலில் முதுகலை, எம்சிஏ முடித்தவர்கள், பட்டய கணக்காளர் (சிஏ) முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயது வரம்பு: 21 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.9,36,020 வரையில் வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.   

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in  அல்லது https://www.ibps.in/wp-content/uploads/ADVT_RA_DM_AC.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.11.2019 

ADVERTISEMENT
ADVERTISEMENT