வேலைவாய்ப்பு

Petrochemicals Jobs: பெட்ரோகெமிக்கல்ஸ் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர். வெங்கடேசன்


கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் (எம்.ஆர்.பி.எல்) நிறுவனத்தில் செக்யூரிட்ரி இன்ஸ்பெக்டர், இளநிலை அதிகாரி, இளநிலை வேதியியல் டிரெய்னி, டெக்னிக்கல் உதவியாளர், டிராப்ட்ஸ்மேன் டிரெய்னி, டிரெய்னி உதவியாளர் உள்ளிட்ட 233 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவம்பர் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 233

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Security Inspector , JM3 Grade  - 13
பணி: Junior Officer –Official Language Implementation, JM3 Grade - 01
பணி: Junior Chemist Trainee - 06

பணி: Technical Assistant Trainee(Chemical) - 113 
பணி: Technical Assistant Trainee (Mechanical)  - 27 
பணி: Technical Assistant Trainee (Electrical) - 36 
பணி: Technical Assistant Trainee (Instrumentation) - 25

பணி: Draftsman Trainee - 01
பணி: Trainee Assistant (Finance)  - 02
பணி: Trainee Assistant(Materials) - 04
பணி: Trainee Assistant (Hindi) - 04
பணி: Trainee Assistant - 01

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 முதல் 46 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தகுதி: கலை மற்றும் அறிவியல் பிரிவில் இளங்கலை பட்டம், பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்க. 

விண்ணப்பிக்கும் முறை: https://www.mrpl.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடல்தகுதி தேர்வு, செய்முறைத்தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://img.freejobalert.com/uploads/2019/10/Notification-MRPL-Jr-Officer-Chemist-Other-Posts.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.11.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT