தொகுதிகள்

திருமயம்: நதிகள் இணைப்புத் திட்டத்தால் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு?

அருசிவபாலன்


புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரிய தொகுதியாக விளங்கும் திருமயம் சட்டப் பேரவை தொகுதியானது, அண்மையில் அடிக்கல் நாட்டிய காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தால் அதிமுக வசமாகுமா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது.

தொகுதி அறிமுகம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக பெரிய தொகுதியாக உள்ளது திருமயம் மட்டுமே. வட்டத்தலைமையகமாகவும், ஊராட்சியாகவும் உள்ளது.

தொகுதியில் திருமயம், பொன்னமராவதி, அரிமளம் ஆகிய ஒன்றியங்கள் உள்ளன.

சமூகம், தொழில்: முத்தரையர்கள், முக்குலத்தோர், தலித்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதி. இவர்களைத் தொடர்ந்து நகரத்தார்களும், இஸ்லாமியர்களும் கணிசமாக வசிக்கின்றனர். குறிப்பிடும்படியான தொழிற்சாலைகள் இல்லாததால் வேளாண்மையே பிரதான தொழிலாக உள்ளது.

அரசியல் களம்: 2006 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திருமயம் தொகுதியை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. 2011 தேர்தலில் அதிமுக இத்தொகுதியை கைபற்றியது. 2016-இல் திமுகவுக்கு வெற்றி கிடைத்தது. முன்னாள் அமைச்சர் ரகுபதி வெற்றி பெற்றார்.

அதற்கு முந்தைய தேர்தல்களில் 1996, 2006ல் காங்கிரஸ் கட்சியும், 1967, 1971, 1989ல் திமுகவும், 1991, 2001ல் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

திருமயம் தொகுதி மக்களின் நீண்ட கால கனவுத்திட்டமான காவரி-வைகை-குண்டாறு திட்டத்திற்காக கடந்த 21 ஆம் தேதி  அடிக்கல் நாட்டப்பட்டது தொகுதி மக்களிடையே பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

காவிரி ஆற்றினை திருமயம் தொகுதிக்கே கொண்டு வந்துள்ளோம் என அதிமுகவினர் பெருமிதம் கொள்கின்றனர். திமுக பொருத்தவரையில் மு.க.ஸ்டாலின், கனிமொழி சுற்றுப்பயணம் செய்தது மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளதாக திமுகவினர் கருதுகின்றனர்.

இத்தொகுதியில் அதிமுக சார்பில் பி.கே.வைரமுத்து, தொழிலதிபர் பி.கே.குமாரசாமி,  திமுக சார்பில் எஸ்.ரகுபதி, பொன்னமராவதியில் திமுக ஒன்றியச் செயலர் அ.அடைக்கலமணி, முன்னாள் எம்எல்ஏ ஆலவயல் சுப்பையாவின் மகனும், திமுக சமூகவலைதளப் பொறுப்பாளருமான ஆலவயல் முரளி சுப்பையா ஆகியோர் போட்டியிட விருப்பமாக உள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராம.சுப்புராம், தேமுதிக சார்பில் மாவட்டச் செயலர் ராமசாமி ஆகியோர் போட்டியிடும் ஆவலில் உள்ளனர். அதிமுக கூட்டணியில் இத்தொகுதியில் போட்டியிட வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர் கே.கே.செல்வக்குமாரும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல் நிலவரம்:

1957:  வி.ராமையா (காங்)  -  28,178 (வெற்றி).
          முத்துவைரவ அம்பலக்காரர் (சுயே) -  9,619.

1962: வி.ராமையா (காங்)  -  28,219 (வெற்றி).
          வி.பாலகிருஷ்ணன் (சுயே)-   17,916.  

1967: பி.பொன்னம்பலம் (திமுக) - 44,511 (வெற்றி).
          வி.ராமையா (காங்) - 24,290.

1971: தியாகராஜன் (திமுக )  - 38,630 (வெற்றி).
          பி.ஆர்.ராமநாதன் (பழைய காங்)  -  24,353.

1977:  என்.சுந்தர்ராஜ் (காங்) - 20,694 (வெற்றி)
           பி.பொன்னம்பலம் (அ.திமுக ) - 20,637

1980: என்.சுந்தர்ராஜ் (காங்) -  39,479 (வெற்றி)
          பி.பொன்னம்பலம் (அ.திமுக ) - 39,256

1984: டி.புஷ்பராஜ் (காங்) -  65,043 (வெற்றி)
          ஆர்.பாவாணன் (திமுக ) -  26,360

1989: வி.சுப்பையா (திமுக )- 32,374 (வெற்றி)
         சி.சுவாமிநாதன் (காங்) -22,630.

1991: எஸ்.ரகுபதி (அ.திமுக ) -  72,701 (வெற்றி)
         ராமகோவிந்தராஜன் (திருநாவுக்கரசர்அணி) -  27,978.

1996: வி.சின்னையா (த.மா.க.)  -  53,552 (வெற்றி).
         எஸ்.ரகுபதி (அ.திமுக ) - 41,664.

2001: எம்.ராதாகிருஷ்ணன் (அதிமுக ) - 58,394 (வெற்றி).
         எஸ்.ரகுபதி (திமுக )- 46,367
.
2006: ராம.சுப்புராம் (காங்) - 47,358 (வெற்றி).
          எம்.ராதாகிருஷ்ணன் (அதிமுக ) - 47,044.

2011: பி.கே. வைரமுத்து (அதிமுக) - 78,913 (வெற்றி)
          ராம. சுப்புராம் (காங்கிரஸ்) - 47,778.

2016: ரகுபதி (திமுக)  - 72,373 (வெற்றி)
          வைரமுத்து (அதிமுக)  - 71,607

இந்த தொகுதியில் 1957 ஆம் ஆண்டு முதல் இதுவரை 14 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 3 முறையும், த.மா.க. ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

தற்போதைய எம்எல்ஏவான எஸ்.ரகுபதி எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததினால் பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என மக்கள் கருதுகின்றனர். மேலும், கடந்த தேர்தலில் அதிமுக 766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை கைவிட்டது. உள்கட்சி பூசலால் எழுந்த இந்த விரிசலை, தற்போதைய நதிகள் இணைப்புத் திட்டம் சரிசெய்துவிட்டது என்கின்றனர் அதிமுகவினர்.

அதிமுக-திமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே கடும் போட்டி என்பது மறுப்பதற்கில்லை. எனினும் இதர கட்சிகளும் களம் காணலாம். 

தற்போதைய வாக்காளர்கள்: ஆண்-  1,10,974, பெண்- 1,16,167, மூன்றாம் பாலினம்- 3, மொத்தம்- 2,27,144. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT