சிறப்புக் கட்டுரைகள்

எரியும் இலங்கை: தமிழர்களுக்கும் சிங்களர்களுக்குமான பிரச்னை; நேரடி ரிப்போர்ட்-18

15th May 2022 11:02 AM | கே.எஸ். இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

 

தமிழர்களுக்கும் சிங்களர்களும் இடையிலான பிரச்சனையானது கிமு 2 ஆம் நூற்றாண்டளவில் அடையாளம் காணப்படுகின்றது .

அதன் பின்னர் கிறிஸ்துவிற்கு பின் 3 ஆம் நூற்றாண்டில் மீண்டும் அடையாளம் காணப்படுகின்றது .

இந்தப் பிரச்னைகளின் தொடர்ச்சியாக தீப வம்சத்தை தமது ஆதாரமாக வைத்துக்கொண்டு கிபி 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாநாமதேரர் என்பவர் தன் விருப்புவாதத்தை முன்னிலைப்படுத்தி மகாவம்சத்தை எழுதியதும் அதன் தொடர்ச்சியாக கிபி ஏழாம் நூற்றாண்டில்  சிங்கள மொழி கிறிஸ்துவிற்கு பின் தோற்றம் பெற்றதும், இந்தியாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட பௌத்தர்கள் சிங்கள மொழியென்ற மொழியை தமிழுடன் பாளியை கலந்து புதுமொழியாக உருவாக்கி தம்மை பாதுகாத்துக் கொண்டு வந்தனர்.

ADVERTISEMENT

இந்தியாவில் சோழர்களின் தீவிர எழுச்சியால் கிபி 9 , 10 ஆம் நூற்றாண்டுகளில் பௌத்தம் இந்தியாவில் முழுவதுமாக அழிக்கப்பட்டு இலங்கையில் தீவிரப்படுத்தப்பட்டதும், கிபி 12 நூற்றாண்டில் தமிழ்மன்னனான நிசங்கமல்லன் என்பவர் பௌத்தன் ஒருவனே இலங்கையை ஆளமுடியும் என்ற எழுதாத சட்டத்தை இயற்றி அதனை நடைமுறையால் நிரூபித்து வந்ததும் இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரியதொரு பாதிப்பை ஏற்படுத்தியது.(நிசங்க மல்லன் தமிழனாக இருந்தும் பௌத்த மதத்தை தழுவி ஆட்சி புரிந்ததும் அன்றைய காலத்தின் கோலமே)

இதையும் படிக்க | எரியும் இலங்கை: நவீன அடிமைகளா மலையகத் தமிழர்கள்? நேரடி ரிப்போர்ட்-15

பின்னர் ஐரோப்பிய வருகையுடன் (1505) பௌத்த மதமானது அமைதி பேணினாலும் 1880களில் ''அளுத் விகாரை''யில் மகாவம்சத்தின் ஓலைச்சுவடி கண்டு பிடிக்கப்பட்டு மகாவம்சம் மொழிமாற்றம் செய்யப்பட்டதும், பாணந்துறையில் கிறிஸ்தவ பாதிரிமாரை பௌத்த துறவிகள் வாதத்தில் வென்று பௌத்தத்தின் மீள் தோற்றத்திற்கு வித்திட்டதும், 1911-களில் அநகரிக தர்மபால என்ற பௌத்த துறவியின் கருத்துருவாக்கம் கூர்மையடைந்து மகாவம்சத்தில் பலவேறு கற்பனை கருத்துக்கள் உள்செருக்கப்பட்டு ஒரு இனத்தை அழிப்பது பாவமில்லை என்று ஒவ்வொரு சிங்கள மக்களின் மனதிலும் ஆழமாக புதைக்கப்பட்டதும் 1915 வரை தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த பிரித்தானியர்கள் 1918 இல் அன்றைய தமிழ்த்தலைவர்கள் இந்திய காங்கிரசுடன் இணையப்போகிறோம் என்று குரல்கொடுத்ததும், 1921 களில் பிரித்தானியாவால் கொண்டுவரப்பட்ட மனிங் சீர்திருத்தத்தில் 13 சிங்களவர்களும் 3 தமிழர்களும் இடம்பெற்றதும், 1920 இல் தமக்குள் தாமே அடிபட்டுக்கொண்டு இலங்கை காங்கிரஸ் என்ற அணியில் இருந்தவர்கள் இலங்கை மகா சபை என்ற ஒன்றை உருவாக்கியதும், தொடர்ந்தும் பிரித்தானியருக்கு தலையிடியாக இருந்த அன்றைய இந்தியாவை ஆதரித்தது. அன்றைய யாழ்ப்பாண வாலிபர் சங்கம் காந்தியை 1927இல் அழைத்துவந்தனர்.

இதையும் படிக்க | எரியும் இலங்கை: மலையகத் தமிழர்களின் நிலை: நேரடி ரிப்போர்ட்-16

தமிழ் பகுதியில் 1931 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பில் சர்வஜன வாக்குரிமையை பிரித்தானியர்கள் வழங்கியபோதும், கடந்த காலங்களில் ஆகக்குறைந்த உரிமையான சோல்பரி யாப்பை கூட சரியாக போர் குணத்தில் கையாளாமல் ஆனது.

பின்பு, 1948-களின் தொடர்ச்சியாக நாடாளுமன்றம் சென்றவர்கள் தமிழர்களின் நலனை கவனிக்கவில்லை. அன்றைய காலத்தில் அதாவது 1925 ஜூன் 26 -ல் எழுதிய மகேந்திரா ஒப்பந்தம் பற்றி பண்டா செல்வா ஒப்பந்தத்தின் (ஜுலை 26, 1957) போதோ அல்லது டட்லி செல்வா ஒப்பந்தத்தின் (24 மார்ச் 1965) போதோ மூச்சு விடாததும் கொடுமையிலும் கொடுமை.

இதையும் படிக்க | எரியும் இலங்கை: சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தத்தின் ரணம்; நேரடி ரிப்போர்ட்-17

சிங்கள மக்களின் கூட்டாளிகள் சிங்கள காமினிஸ் என்று ஒன்றிணைந்து தமிழர்களுடன் கைகோர்த்த போதும் அல்லது (தாம் மூத்த தமிழ்குடிகளில் இருந்து கால சுழற்சியில் 13 ,14 , 15 ஆம் நூற்றாண்டில் சிங்கள மதத்தாலும், மொழியாலும் உள்வாங்கப்பட்ட தமிழர்கள் என்று அறிந்து தமிழர்களுடன் கைகோர்த்த போதும் அவர்களை புறம்தள்ளியதால் 1965-ல் சிங்கள ஏகாதிபத்தியத்துடன் கைகோர்த்த சிங்கள கம்யூனிச இயக்கங்கள் தமிழ் தேசிய நிலைக்கு ஆதரக்கவில்லை.

எது எப்படியாக இருந்தாலும் இன்றைய காலத்தில் எல்லா தமிழர்களும் ஒருகுடையின் கீழ் இணையவேண்டியது அவசியமும் அவசரமும் எனலாம்.

தமிழர்களின் ஆணிவேர் பிரச்சனை எங்கிருந்து ஆரம்பித்தது என்பதை உணர்ந்து எவ்வாறு சரியான தீர்வினை மேற்கொள்ள முடியுமென ஆக்கபூர்வமான சிந்திக்க வேண்டும் ,

பாவப்பட்ட மக்களுக்கு தீர்க்கமான விழிப்புணர்வை வழங்க வேண்டும் கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு.

                                                                                                                           -தொடரும்

ADVERTISEMENT
ADVERTISEMENT