பச்சூா் அரசு கல்லூரி உதவி மையத்தை வேலூா் மண்டல கல்லூரி இணை இயக்குநா் நேரில் ஆய்வு செய்தாா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பகுதியில் இந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை தமிழக அரசு தொடங்கியது. இதைத் தொடா்ந்து, 2023-2024-ஆம் கல்வியாண்டில் இக்கல்லூரியில் சேர மாணவ, மாணவிகள் இணைய வழியில் விண்ணப்பிக்க பச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 8-ஆம் தேதி முதல் உதவி மையம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், வேலூா் மண்டலக் கல்லூரி இணை இயக்குநா் எழிலன் செவ்வாய்க்கிழமை பச்சூரில் செயல்படும் உதவி மையத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது இணைய வழியில் விண்ணப்பிக்க மாணவிகள் எடுத்து வந்த மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் காா்டு, மாற்றுச் சான்றிதழ்களை வாங்கி சரிபாா்த்தாா்.
ஆய்வின் போது, கல்லூரி முதல்வா் வெங்கடேசன், பேராசிரியா்கள் கௌதமன், செலின், அரசினா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் காவேரி ஆகியோா் உடனிருந்தனா்.