நியூஸ் ரீல்

நான் ஒரு வாடகைத் தாய்!

15th May 2019 05:16 PM

ADVERTISEMENT

சல்மான் கானுடன் கேத்ரினா கைப் நடித்துள்ள "பாரத்' வெளியாகவுள்ள நிலையில், முன்னாள் ஓட்டப் பந்தய வீராங்கனை பி.டி.உஷா பற்றிய வரலாற்று படத்தில் கேத்ரினா நடிக்கப் போவதாக இணையதளத்தில் தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து கேத்ரினா கூறியதாவது, "இந்த வரலாற்று படத்தில் நான் நடிக்கிறேனோ, இல்லையோ உண்மையில் இப்படி ஒரு படத்தை தயாரிக்கப் போவதாகவும், அதில் நான் நடிக்கப் போவதாகவும் தயாரிப்பாளர்கள் அறிவித்தால் மட்டுமே இதுபற்றி கூற முடியும்'' என்கிறார்.

கடைசியாக 'ரேஸ் 3' என்ற ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடித்த ஜாக்குலின் பெர்னாண்டஸ், முதன்முறையாக ஃபராகான் தயாரிக்கும் நெட் பிளக்ஸின் 'மிஸஸ் சீரியல் சில்வர்' என்ற தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர் கொலைகளில் சம்பந்த படுத்தி சிறையில் அடைப்பட்டுள்ள தன் கணவரை காப்பாற்றும் மனைவியாக நடிக்கும் ஜாக்குலின், இப்படத்திற்காக எடுக்கப்பட்ட தன்னுடைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு முதல் தகவலை ரசிகர்களிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சுகாந்த் சிங் ராஜ்புத்துடன் 'டிரைவ்' மற்றும் சல்மான்கானுடன் 'கிக் 2' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறாராம். 

ADVERTISEMENT

ராஜ்குமார்ராவுடன் 'சிடி லைட்ஸ்' என்ற படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பத்ரலேகா, 'பத்னாம் கலி' என்ற வெப் சீரியலில் வாடகை தாயாக நடிக்கிறார். 'இது ஒரு வித்தியாசமான பாத்திரம் என்பதுடன் இது பலரது கண்களை திறக்கக் கூடிய கதையம்சம் கொண்டது என்பதால் ஒப்புக் கொண்டேன்' என்று கூறும் பத்ரலேகா, சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட 'போஸ் டெட் அலைவ்' என்ற படத்திலும் முக்கிய காட்சியில் நடித்துள்ளார். அடுத்து முதன்முறையாக ஒரு கன்னட படத்திலும் நடிக்கவுள்ளார்.

- அருண்

ADVERTISEMENT
ADVERTISEMENT