திரை விமரிசனம்

கடக்க முடியாத இரவுகள்- 'பூதகாலம்': திரை விமர்சனம்

22nd Jan 2022 06:27 PM | சிவசங்கர்

ADVERTISEMENT

அம்மா, மகன், பாட்டி மூவரும் ஒரு வீட்டில் வசித்து வருகிறார்கள். ஒருநாள் பாட்டி இறந்து விடுகிறாள். பின், அந்த வீட்டில் இருப்பவர்கள் தொடர்ச்சியான அமானுஷ்ய சம்பவங்களை பார்த்து அச்சமடைகிறார்கள்.

ஒருகட்டத்தில் வீட்டில் பேய் இருப்பது உறுதியாகிறது. இறுதியில் வீட்டில் இருந்தவர்கள் பேயிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் பூதகாலத்தின் கதை.

மகனாக வினு(ஷான் நிகம்), அம்மாவாக ஆஷா (ரேவதி) நடித்திருக்கிறார்கள். படத்தின்  சில எதிர்பாராத காட்சிகளில் ஷான் நடிப்பில் அசரடித்திருக்கிறார், குறிப்பாக, தன் பாட்டி இறந்து சில நாள் கழித்து அறையில் ஒரு காலடியைக் கண்டதும் கதவைத் திறக்கச் சொல்லி சத்தம் போடுவதும் நண்பர்களுடன் குடித்துவிட்டு ஆடும் காட்சியும் பார்வையாளர்களை அச்சமடையச் செய்பவை.

இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான திரைப்படம் என்பதால் அதிக காட்சிகள் ஒரே வீட்டில் படப்பிடிக்கப்பட்டிருந்தாலும் தேர்ந்த ஒளிப்பதிவும், பின்னணி இசையும் திகிலைத் தருகிறது. 

ADVERTISEMENT

ஒரு குறைந்த முதலீட்டில் பார்வையாளர்களை நகர விடமால் அடுத்தது என்ன என்கிற பதற்றத்தைப் படம் முழுவதும் கடத்தியிருக்கிறது படக்குழு.

தேவையற்ற காதல் காட்சிகள், ரேவதி திரும்பத் திரும்ப மருத்துவரைச் சந்திக்கும் காட்சிகள் போன்றவை படத்திற்கு சிறிய தொய்வைத் தருகிறது. 

இருப்பினும் இயக்குநர் ராகுல் சதாசிவன், இசையமைப்பாளர் கோபி சுந்தர் ஆகியோரின் பணியில் ஹாரர் படத்திற்கு உண்டான ‘இரு நுனிக்காட்சிகள்’ நிறைய இருப்பதால் ’பூதகாலம்’ ரசிக்க வைக்கிறது.

பூதகாலம்- சோனி லைவ் தளத்தில் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க | மறுபிறவி எடுக்கும் காதலன் 'ஷியாம் சிங்கா ராய்’- திரை விமர்சனம்

ADVERTISEMENT
ADVERTISEMENT