செய்திகள்

ஓடிடியில் புகைப்பிடித்தல் எச்சரிக்கை வாசகம் கட்டாயம்!

31st May 2023 01:23 PM

ADVERTISEMENT

ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களிலும் புகைப்பிடித்தல் வாசகங்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

திரையரங்குகளில் படங்கள் வெளியாவதற்கு முன்னதாக தணிக்கை சான்றிதழ் பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. புகைப்பிடித்தல், மதுபானங்கள் உபயோகித்தல் உள்ளிட்ட காட்சிகளுக்கு எச்சரிக்கை வாசகம் இடம்பெற வேண்டும்.

ஆனால், ஓடிடியில் நேரடியாக வெளியாகும் படங்கள், இணைய தொடர்களுக்கு தணிக்கை அவசியமில்லை.

இந்நிலையில், ஓடிடி தளத்தில் இனி வெளியாகும் படங்களில் புகைப்பிடித்தல், புகையிலை பொருள்கள் வரும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிவிப்பை மீறும் படக்குழு மீது மத்திய சுகாதாரம் மற்றும் ஒளிபரப்பு துறை சார்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT