செய்திகள்

தனுஷ் குரலில் வெளியான அனுஷ்கா படத்தின் பாடல்!

31st May 2023 01:25 PM

ADVERTISEMENT

தனுஷ் குரலில் வெளியான அனுஷ்கா படத்தின் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழில் ரஜனிகாந்த், அஜித், விஜய், சூர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவிட்டார்.

குறிப்பாக பாகுபலி திரைப்படத்தின் வெற்றி அவரை இந்திய அளவில் பிரபலமான நடிகையாக்கியது. 

சமீபகாலமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த அனுஷ்கா, 2 ஆண்டுகளுக்குப் பிறகு, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது

ADVERTISEMENT

இப்படத்தில் நவீன் பாலிஷெட்டி, அனுஷ்கா ஷெட்டி, ஜெய சுதா, முரளி ஷெர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மகேஷ் பாபு இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதையும் படிக்க: மாமன்னன் படத்தின் புதிய அப்டேட்!

இந்நிலையில், இந்தப் படத்தில் தனுஷ் பாடியுள்ள என்னடா நடக்குது பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT