செய்திகள்

ஓடிடி எனும் புரட்சி வருவதை நான் முன்பே கணித்தேன்: கமல்ஹாசன் 

28th May 2023 12:31 PM

ADVERTISEMENT

 

தமிழின் தலைசிறந்த நடிகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக குணாம்சங்களை கொண்டவர் கமல்ஹாசன். அவரது கடைசி திரைப்படமான விக்ரம் மாபெரும் வெற்றி பெற்றது.

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கரின் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதற்கடுத்து யாருடன் இணைந்து நடிப்பாரென கடும் போட்டி நிலவுகிறது. பா. ரஞ்சித், ஹெச்.வினோத் போன்றவர்கள் இந்த பட்டியலில் காத்திருக்கின்றனர். 

இதையும் படிக்க: டோவினோ தாமஸை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்! 

ADVERTISEMENT

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் கமல்ஹாசன் ஓடிடி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்து பேசியுள்ளார். விஸ்வரூபம் திரைப்படம் வரும்பொது ஓடிடி குறித்து கமல் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கமல் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: 

யாவருக்கும் முன்பு ஓடிடி வருகை குறித்து அறிந்தவன் நான். அப்போதே நான் எல்லோரிடமும் கூறினேன்; யாரும் என்னுடன் ஒத்துழைக்கவில்லை. தற்போது அனைவரும் புரிந்து கொண்டனர் நான் சொல்ல வந்ததை. நான் சினிமா காதலன். நான் பார்க்க விரும்பும் படங்களை தயாரிக்கிறேன். அதில் பணத்தை செலவிடுவ்தை தவிர்த்து எதுவும் செய்வதில்லை. 

இதையும் படிக்க:  அக்காவிற்காக திருப்பதியில் சாமி தரிசனம் செய்த கீர்த்தி சுரேஷ்!

நீங்கள் எம்.ஏ. இலக்கியத்தில் பட்டம் பெற்றாலும் திரைக்கதை எழுத முடியாது. இது வேறு வகையான கலை. ஷேக்ஸ்பியர் இன்று வந்து திரைக்கதை குறித்து பயிற்சி பட்டரை நடத்தலாம். அவர் ஒரு சிறந்த கலைஞன். 

கல்வி மிகக் குறைவாகதான் ஆரம்பித்திருக்கிறது. இயற்கையாகவே அப்படித்தான் நடக்கும். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. கிரிக்கெட் பயிற்சிக்கு  நிறைய இடங்கள் உள்ளன. அதேமாதிரி சினிமாக்கு பொருந்துமென நினைக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT