செய்திகள்

ராஜன் வகையறா தயார்: சந்தோஷ் நாராயணன்

9th Jun 2023 04:38 PM

ADVERTISEMENT

 

வடசென்னை படத்தில் இடம்பெற்ற ராஜன் கதாபாத்திரம் குறித்த திரைப்படம் தயார் நிலையில் உள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் வெற்றிமாறன் நடிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ’வடசென்னை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குநர் என்கிற பெயரையும் பெற்றுத்தந்தது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

ADVERTISEMENT

இதையும் படிக்க: இது அவதூறு: பெண் தொழிலதிபர் மீது கோபி நயினார் புகார்

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேர்காணல் ஒன்றில் பேசியபோது, ‘வெற்றிமாறன் வடசென்னை படத்தில் இடம்பெற்ற ராஜன் கதாபாத்திரத்தை வைத்தே 2 மணி நேரம் கொண்ட முழுப்படம் வைத்துள்ளார். அதை என்னிடம் போட்டுக் காண்பித்தபோது பயங்கரமாக இருந்தது. இப்படம் வடசென்னையை விட நன்றாக இருக்கும். வெற்றிமாறனிடம் சொல்லி விரைவில் ராஜன் வகையறாவை வெளியிட கோரிக்கை வைக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார். 

ராஜனாக நடித்த இயக்குநர் அமீர் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT