செய்திகள்

குஷி சம்பளத்தில் எஸ்.ஜே.சூர்யா செய்த செயல்.. பிரபல நடிகர் நெகிழ்ச்சி

9th Jun 2023 01:41 PM

ADVERTISEMENT

 

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா குஷி பட சம்பளத்தில் செய்த செயலைக் கூறி நெகிழ்ச்சியடைந்துள்ளார் பிரபல நடிகர்.

எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'பொம்மை'. கதாநாயகியாக  பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இப்படத்தை மொழி, அபியும் நானும் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராதா மோகன்  இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜூன் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

ADVERTISEMENT

இந்நிலையில், படத்தின் புரோமோஷனுக்காக எஸ்.ஜே.சூர்யா பல்வேறு சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில், பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு அவருடன் இணைந்து இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து நேர்காணலில் கலந்துகொண்டார். 

இதையும் படிக்க: வெளியீட்டிற்கு முன்பே சாதனை படைத்த ஜவான்!

அப்போது பேசிய மாரிமுத்து, ‘சூர்யா மிகச்சிறந்த உழைப்பாளி. அந்த உழைப்பைப் பார்த்த பின்புதான் நடிகர் அஜித், வாலி படத்திற்கான வாய்ப்பைக் கொடுத்தார். அதன்பின், விஜய் நடிப்பில் குஷி உருவானது. அப்படத்திற்கு எஸ்.ஜே.சூர்யாவிற்கு சில லட்சங்களில் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. நானாக இருந்தால் அந்தப் பணத்தை மொத்தமாக மறைத்திருப்பேன். ஆனால், சூர்யா அட்வான்ஸ் தொகையை ஒரு பைக் விற்பனை நிறுவனத்தில் கட்டி அவருடன் இருந்த 7 உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனங்களை வாங்கிக்கொடுத்தார். நாங்கள் பஸ் மற்றும் சைக்கிள்களில் வந்து கஷ்டப்பட்டதைப் பார்த்து சூர்யா இதைச் செய்தார். இதை, இன்றுவரை நான் நினைத்துப்பார்க்கிறேன். அப்போது, உதவி இயக்குநராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் இன்றும் அந்த பைக்கை வைத்திருக்கிறார்’ என நெகிழ்ச்சியாக நினைவு கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT