செய்திகள்

வெளியீட்டிற்கு முன்பே சாதனை படைத்த ஜவான்!

9th Jun 2023 12:51 PM

ADVERTISEMENT

 

ஜவான் திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பான வியாபாரம் பாலிவுட் வட்டாரத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது

தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இதையும் படிக்க: லியோவில் கிறிஸ்டோபர் நோலன் பட நடிகர்!

இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.

ஷாருக்கான் நடிப்பில் இறுதியாக வெளியான ‘பதான்’ திரைப்படம் உலகளவில் ரூ.1,050 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT