நடிகர் ரஜினிகாந்த் கொடுத்த பரிசு குறித்து தமன்னா நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார்.
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.
தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இதையும் படிக்க: கவர்ச்சி.. படுக்கையறைக் காட்சிகள்.. லஸ்ட் ஸ்டோரீஸில் தமன்னாவின் சம்பளம் இவ்வளவா?
சமீபத்தில் இப்படப்பிடிப்பு நிறைவுபெற்றது. இந்நிலையில் நடிகை தமன்னா, ’ரஜினி அவர்களுடன் நடித்தது என் கனவு நிஜமான தருணம். ஜெயிலர் படப்பிடிப்பின்போது எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர் கையொப்பமிட்ட ஆன்மீக புத்தகத்தைப் பரிசளித்தார். ஒரு அர்த்தமுள்ள பரிசு அது.’ எனத் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது.