செய்திகள்

கவர்ச்சியில் தமன்னா, மிருணாள் தாகூர்: வெளியானது லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 டீசர்

6th Jun 2023 03:22 PM

ADVERTISEMENT

 

லஸ்ட் ஸ்டோரீஸ் - 2 இணையத் தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆந்தாலஜி தொடராக வெளியாகி வரவேற்பைப் பெற்ற தொடர் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’. இதன் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. 

ADVERTISEMENT

இந்நிலையில், ‘லஸ்ட் ஸ்டோரீஸ் - 2’ தொடரின் டீசர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. இப்பாகத்தில் கஜோல், தமன்னா, மிருணாள் தாகூர், விஜய் வர்மா, தில்லோடமா ஷோம், அம்ருதா சுபாஷ், அங்கத் பேடி ஆகியோர் நடித்துள்ளனர். அமித் ரவீந்தர்நாத் சர்மா, கொங்கோனா சென் சர்மா, ஆர்.பால்கி, சுஜோய் கோஷ் ஆகியோர் இயக்கியுள்ளனர்.

4 எபிசோடுகளாக உருவாகியுள்ள இப்பாகத்தில் தமன்னா மற்றும் மிருணாள் தாகூர் இடம்பெற்றுள்ள காட்சிகள் கவர்ச்சியாக எடுக்கப்பட்டுள்ளன. 

இப்பாகம் வருகிற ஜூன் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT