செய்திகள்

நீங்க ஏன் ஹீரோயினா நடிக்கக் கூடாது?: அஞ்சனாவின் அழகிய புகைப்படத்தினால் மயங்கிய ரசிகர்! 

3rd Jun 2023 03:09 PM

ADVERTISEMENT

 

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக தமிழக மக்களிடம் அறிமுகமானவர் விஜே அஞ்சனா. அவர் பல தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கயல் படத்தின் ஹீரோ சந்திரனை 2016இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளார். தற்போது  அஞ்சனா படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். 

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சனா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவார். சில வருடங்கள் முன்பு சைபர் காவல்துறையிடம் புகாரிடும் அளவுக்கு ஆபாச செய்திகளை பயனர்கள் அஞ்சனாவிற்கு அளித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் நேற்று பதிவிட்ட சேலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

பலரும் “மிகவும் அழகாக இருக்கிறது”, “தேவதை போல இருக்கிறீர்கள்” என புகழ்ந்து வரும் நிலையில் ரசிகர் ஒருவர், “நீங்க ஏன் ஹீரோயின்னா நடிக்க கூடாது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

விஜே அஞ்சனா முன்பொருமுறை நேர்காணல் ஒன்றில், “நான் நடிகையாக விரும்பவில்லை. நினைத்தால் நடிப்பேன். பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் எனக்குதான் விருப்பமில்லை” எனத் தெரிவித்திருந்தார். 

சின்னத்திரையில் இருந்து வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் போன்ற நடிகைகள் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றனர். தற்போது ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று விஜே அஞ்சனா சினிமாவில் நடிக்க வருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  
 

ADVERTISEMENT
ADVERTISEMENT