செய்திகள்

இணையத் தொடரை இயக்கும் சௌந்தர்யா ரஜினிகாந்த்

1st Jun 2023 05:44 PM

ADVERTISEMENT

 

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் இணையத் தொடர் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யா, சௌந்தர்யா இருவரும் இயக்குநர்களாக உள்ளனர். சினிமாவில் தங்களுக்கென தனி அடையாளத்தை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து படங்களை இயக்கியும் வருகின்றனர். 

தற்போது, ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: பிரபாஸுக்கு வில்லனாகும் கமல்? அதிர்ச்சி தரும் சம்பளம்!

இந்நிலையில், ரஜினியின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் இணையத் தொடர் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தகவல்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT