செய்திகள்

பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவு 

26th Jan 2023 07:41 PM

ADVERTISEMENT

பிரபல சண்டைப் பயிற்சியாளரான ஜூடோ ரத்னம் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 93.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளராக பணியாற்றியவர் ஜூடோ ரத்னம். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களில் பணியாற்றியுள்ள ஜூடோ ரத்னம் தமிழ்நாடு அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக ஓய்வில் இருந்தார். 

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக வியாழக்கிழமை அவர் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT