செய்திகள்

‘ஆதிபுருஷ்’ வெளியீடு எப்போது? மீண்டும் உறுதி செய்த பிரபாஸ்

17th Jan 2023 07:52 PM

ADVERTISEMENT

நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை நடிகர் பிரபாஸ் மீண்டும் உறுதி செய்துள்ளார்.

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடிக்கிறார் பிரபாஸ். 2021 பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கியது. ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. ஆதிபுருஷ் படம் 2023, ஜனவரி 12-ல் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க | வாத்தி படத்தின் 'நாடோடி மன்னன்' பாடல் வெளியீடு!

ADVERTISEMENT

இந்நிலையில், கடந்த 2022-ல் வெளியான ஆதிபுருஷ் படத்தின் டீசரின் கிராபிக்ஸ், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் காட்சிகளை ரசிகர்கள் விமர்சனம் செய்தார்கள். 

இதனைத் தொடர்ந்து, ஆதிபுருஷ் படத்தின் சில காட்சிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்து கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து, 2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், படம் வெளியாக இன்னும் 150 நாள்களே உள்ளதாக டிவீட் செய்த பிரபாஸ் படத்தின் வெளியீட்டு தேதியை மீண்டும் உறுதி செய்துள்ளார்.இந்த பதிவை தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஆதிபுருஷ் டிரெண்டாகி வருகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT