செய்திகள்

பிக் பாஸ் வீட்டிலும் ‘தமிழ்நாடு’ ஆதரவுக் குரல்!

DIN

பிக் பாஸ் வீட்டிலும் ‘தமிழ்நாடு’ குறித்து எழுந்த பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது ‘தமிழ்நாடு’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டதும், ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவிற்கான அழைப்பிதழில் ‘தமிழ்நாடு’ எனக் குறிப்பிடாமல் ‘தமிழகம்’ என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர் விக்ரமன் மற்றும் பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினியும் தமிழ்நாடு குறித்து நடத்திய உரையாடல் வைரலாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 போட்டி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. தற்போது பிக் பாஸ் வீட்டில் விக்ரமன், அஷீம் உள்பட 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், பொங்கல் சிறப்பு நிகழ்விற்காக விஜய் டிவி பிரபலங்கள் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளனர். இதில் திவ்ய தர்ஷினியும் சென்றுள்ளார்.

இந்நிலையில், திவ்ய தர்ஷினியும் விக்ரமனும் உரையாடிக் கொண்டிருக்கும்போது, இன்று பொங்கல் என்பதை தாண்டி நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாள் என்று விக்ரமன் தெரிவித்தார்.

கடந்த 100 நாள்களாக வெளியில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் தமிழ்நாடு பெயர் உருவான வரலாறை விக்ரமன் கூற, நீங்கள் தெரிந்து சொல்லுறீங்களா, இல்ல தெரியாமா சொல்லுறீங்களா என திவ்ய தர்ஷினி கேட்டார்.

தொடர்ந்து, என்றைக்கும் தமிழ்நாடு.. தமிழ்நாடுதான் வேறு எந்த பெயரும் பொறுத்தமாக இருக்காது என திவ்ய தர்ஷினி தெரிவித்தார்.

தமிழ்நாடு பிரச்னை குடியரசுத் தலைவர் வரை சென்றுள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டிலும் ‘தமிழ்நாடு’ என்ற பெயருக்கு ஆதரவு எழுந்துள்ளதை தொடர்ந்து அந்த காணொலியை இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

SCROLL FOR NEXT