செய்திகள்

பிப்.14-ல் பொன்னியின் செல்வன் 2 குறித்து சூப்பர் அப்டேட்!

DIN

பிப்.14-ல் பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தின் முதல் பாடல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான  ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.230 கோடிக்கும் அதிகமாக வசூலித்து  வசூல் சாதனையில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான மீதமுள்ள பணிகளை விரைவில் முடிக்க படக்குழு தீவிரம் காட்டி வருவதாகவும்,  இப்படத்தை அடுத்தாண்டு(2023) ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

உலகளவில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகமானது, பெரிய திரை, துல்லியமான காட்சிக் கடத்தல்கள், ஒலி அமைப்பு கொண்ட ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. தமிழில் வெளியான முதல் ஐமேக்ஸ் திரைப்படம் இதுவாகும்.

இந்நிலையில், பிப்ரவரி 14 ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடலை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடல் அருண்மொழிவர்மன் - வானதி இருவருக்குமான பாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த பாடலை இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து எந்தவித அதிகார்வபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

முதல் பாகத்திலேயே முழுக்க லாபத்தைப் பெற்ற இத்திரைப்படம் 2 ஆம் பாகத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT