செய்திகள்

காந்தாரா அடுத்த பாகம் எப்படி இருக்கும்? ரிஷப் ஷெட்டி தகவல்!

7th Feb 2023 12:39 PM

ADVERTISEMENT

காந்தாரா படத்தின் அடுத்த பாகம் குறித்து இயக்குநர் ரிஷப் ஷெட்டி வெளியிட்ட தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.

ரூ. 16 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கன்னடத்தில் வெளியான இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியானது. இந்தியா முழுவதும் காந்தாரா படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்தது.

இதனைத் தொடர்ந்து காந்தாரா 2ஆம் பாகம் எடுக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் ஹோம்பாலே ப்லிம்ஸ் சமீபத்தில் தெரிவித்த நிலையில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், காந்தாரா படத்தின் 100-வது நாள் விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இரண்டாம் பாகம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

இதையும் படிக்க | ‘பதான் பிடிக்கவில்லை’: குழந்தையின் கருத்துக்கு பதிலளித்த ஷாருக் கான்!

இதுகுறித்து அவர் கூறியதவாது, “தற்போது வெளியானதுதான் காந்தாரா இரண்டாம் பாகம். இதற்கு முந்தைய பாகம் அடுத்தாண்டு வெளியாகும். பல ஆண்டுகளுக்கு முந்தைய கதைதான் காந்தாராவின் அடுத்த பாகமாக இருக்கும். காந்தாரா படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த பாகமானது மிகப்பெரிய பட்ஜெட் செலவில் உருவாகும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT