செய்திகள்

இளையராஜாவின் அடுத்த படம் குறித்த அப்டேட்

15th Apr 2023 11:57 AM

ADVERTISEMENT

 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை முதல் பாகத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரமாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நாயகியாக நடித்துள்ளார். இளையராஜா இசையமைத்திருந்தார். காட்டு மல்லி பாடல் திரையரங்குகளில் அமோக வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படம் ரூ.28 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெற்றியினால் இயக்குநர் வெற்றி மாறனும் படக்குழுவினருக்கு தங்கக் காசுகளை பரிசாக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

பேரன்பும் பெருங்கோபமும் என்கிற புதிய படத்திற்கு இளையராஜா ஒப்பந்தமாகியுள்ளார். பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வரும் அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இந்தப் படத்தினை இயக்குகிறார். அறிமுக நடிகர் விஜித் நடிக்கிறார். சமூக வேறுபாடுகளை குறித்து படம் பேசுமென படக்குழு தெரிவித்துள்ளது. நாச்சியார் படப் புகழ் ஷாலி நிவேகாஸ் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் வந்த செங்களம் தொடரில் கவனத்தை பெற்றுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT