செய்திகள்

பொன்னியின் செல்வன் இணையத்தில் வெளியிடத் தடை

29th Sep 2022 04:41 PM

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் - 1 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத் குமார், நடிகை திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சுமார் ரூ. 500 கோடி செலவில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் நாளை வெளியாகவுள்ளது.

இந்நிலையில், மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மனு அளித்திருந்தது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | மீண்டும் ஷாருக்கானை இயக்குவீர்களா?: மணிரத்னம் விளக்கம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதிப்பதாக உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT